Saturday 27 August 2011

அன்னை



கிருஷ்ணா
மழையில் நனைந்த மகனுக்காய்
மழையை திட்டும் அந்த கவிதையில்
வரும் அன்னையல்ல அவள் நிச்சயமாய்...
மழையும் நானும் தோழர்கள் என
அவளுக்கு தெரியும்...
குடைகள் எனக்கு பழக்கம் இல்லை என
அவளுக்கு புரியும்...
மதிப்பெண்கள் அவளுக்கு பெரிதில்லை
மதிப்பு தான் பெரிது...
என் தோல்விகளை அவள் பெரிதுப்படுத்துவதில்லை...
என் வெற்றிகளை அவள் விமர்சிப்பதுமில்லை...
அன்னையாய் இருப்பதில்
அவள் ஒரு இலக்கணம்...
என சொல்வதில்
எனக்குண்டு தலைக்கணம்......

No comments:

Post a Comment