Saturday 27 August 2011

குடும்ப தலைவி



சுஜா தாமு
திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள்,
உணவுகள், ஆசைகள் கணவரது
என்னங்களுகேற்றபடி.....
கணவருக்காக காட்டன் புடவையும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டு புடவை மோகங்கள்......
கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும்.......
பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......
கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள்.....
அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சி பெட்டியின் முன் மகளும்
முடங்கி போனதால் அடுப்படியே
உலகமாகி போனது எனக்கு........
கடலில் இட்ட பெருங்காயமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி'

No comments:

Post a Comment