Monday, 19 December 2011

காதல் ♥♥♥


எனக்கு கிடைத்த வரம் 
நீ...
உனக்கு கிடைத்த வரம்
நான்...
நமக்காய் கிடைத்த வரம்
காதல் ....
 

என்னுள் 
மோதித்தெறிக்கின்ற
உன் பார்வையில் எல்லாம்
அணு அணுவாய்
காதல்....
 

தேங்கிய நீரிலும்,
தெரிகின்ற நிலவதினில்
உன் முகம் காணும்
என் கண்களுக்குள் 
காதல்....
 

உன் விழி ஈர்ப்பில்
விதைக்கப்பட்டு,
எனக்குள் கருத்தரிக்கும்
என் கவிதைக்குள்ளும்
காதல்....
 

இருண்டு கிடக்கும்
இளமையதில்,
ஒளிந்து கிடக்கும் 
ஆசைகளை 
வெளிச்சமிட்ட உன் 
வெட்கப் புன்னகையில்
காதல்....
 

பேசி பேசி 
விடிந்த பின்னும்
தீராத வார்த்தைகளில்
இன்னும் இன்னும் தீராத
காதல்....
 

உன் மௌன கவியை
மொழிபெயர்க்கும்
என் செல்லக் கம்பனாய்
காதல்....
 

உன்னோடு பேசுவதாய்
எண்ணி, எனக்குள்ளே
பேசிக்கொள்ளும்
நேரத்தில் வந்துவிழும்
கவிதைகள்
காதல்....
 

கருமேகம் சூழ
தோகை விரித்தாட
காத்திருக்கும்,
வண்ணமயில் போல,
உனக்கான காத்திருப்புகள்
அத்தனையும் 
காதல்...
 

நீண்ட பயணம் அதில்
வழித்துணையாய்
வந்திட்ட 
உன்  நினைவுகளில் எல்லாம் 
காதல்....
 

ஏதோ ஒரு தருணத்தில்,
என்னைக் கடக்கும் 
எல்லாரும் நீயாய் 
தெரிகின்ற விந்தை
காதல்...
 

வேண்டாம் என்று 
நினைத்த வேளையிலும்,
முடியாது என்று,
தவித்த வேளையிலும்,
நீயே வேண்டும்
என்ற தவிப்பு
காதல்.....
 
 தேவதை 
உன்னை ஊரே
காதல் செய்ய,
நான் மட்டுமே 
உன் நேசிப்பை பெற வேண்டும்
என்ற தவம்
காதல்...
 

உன் புன்னைகைக்கும்,
நீ சூடும் பூவிற்கும்,
உடுத்துகின்ற உடுப்புக்கும்,
உதட்டுச் சுளிப்பிருக்கும்
வைக்கும் பொட்டுக்கும்,
விரல் இடுக்கில் விழுகின்ற
உன் கூந்தல் கற்றைக்கும்,
தவற விட்ட பேருந்திற்குமாய்
கவிதை சொல்லும்
என் கவிதை
அத்தனையிலும்
மொத்தமாய் காதல்....
♥♥♥♥

Monday, 5 December 2011

எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?...வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விசயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு ரகம்....தன் சுயநலத்துக்காக, காதல்கிற பேருல, நம்ம சுத்தியிருக்கிற, நண்பர்கள் உலகத்த சுருக்கிக்கிற காதலர்கள் ஒரு புறம் (வெகு சிலர் )....(வழக்கம் போல காதல் பதிவான்னு நினைக்க வேணாம்.....)...காதலால நட்ப புறம் தள்ளி வைத்த என் தோழியின் தோழி கதையை அவங்கள் வேண்டுதல் பேருல, கொஞ்சம் நிதர்சன உண்மைகளை மறைத்து, நாகரீக முறையில் பதிவிடுகிறேன்...

அவர்கள் தன் காதலை பதிவிட சொன்னதன் நோக்கம் : காதல் பித்து பிடித்து அலையும் பலருக்கு வெறுப்பாக இருக்கலாம் இந்த பதிவு, ஆனாலும் எங்கயோ தன் சுயம் தொலைத்து கொண்டு இருக்கும் ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ என் வாழ்க்கை ஒரு படமாக இருக்கும்....அதற்காக வேண்டும் என் காதலை கதையாகவோ...இல்லை கவிதையாகவோ சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்....

அதோடு, அந்த தோழியின் சுய அறிவில்லா முன்னால் காதலன், என் வலைத்தளம் வருவானாம் ...உங்கள் நண்பர்கள் இதற்கு இடும் கருத்து அவன் மனதிற்கு எட்டவேண்டும்,  என்று என்னிடம் கூறினார்......

அதோடு என் மனதில் நல் மாற்றம் வேண்டி உங்களிடம் என் கதையை பகிர்கிறேன்னு அவங்க கதைய சொல்லிடாங்க...இதோ உங்களுக்காய்

இளமையின் முதல் சந்தோஷ காலம் எதுன்னு கேட்டா எல்லோரும் கண்ண மூடிடு நம்ம கல்லூரி காலத்தை தான் பதிலாய் சொல்வோம்...அப்படிப்பட்ட கல்லூரி காலம் முடிவடைந்தவுடன் அவரவர் வேலை தேடி பயணப்படுவர்...அனிதா பிறப்பில் வசதியாய் பிறந்து, காலமாற்றத்தால் கடன் பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்க சென்னை  நோக்கிப் பயணப்பட்டவள்....இதுவரை கட்டுக் கோப்பாய் வளர்ந்த சூழலில், சென்னை சுதந்திரம் அவளுக்கு புது வித பயத்தை தந்து...இருப்பினும் ஒரு நல்ல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தாள்..அவள் பெற்றவர்களை விட அதிகம் பாதுக்காப்பை அவள் நட்பு அவளுக்கு தர, அழகான அவள் அலுவலக காலம் நயமாய்ச் செல்ல,  தன் தோழியின் நண்பனாய் அறிமுகமானான் அரவிந்த்...

அரவிந்த் பார்த்ததும் பற்றிக்கொள்ளும் காந்தக் கண்களுக்குச் சொந்தக்காரன்....அரவிந்தனின் முதல் பார்வையே, அனிதாவின் மீதான காதல் படையெடுப்பாய் மாறியது..அதை பார்வையில் உணர்ந்த அனிதா, சற்றும் பொருட்படுத்தாமல் நட்பு ரீதியில் நாட்களைக் கடத்தினாள்..நாட்கள் நட்பின் போர்வையில் நகல, அனிதா மீதான் தன் காதலை அரவிந்தன் அவளிடம் சொன்னான்...

இது அவள் எதிர்பார்த்த ஒன்று தான், இருந்தாலும் அவன் காதலை ஏற்காத அனிதா அவன் நட்பை விட்டு விலக நினைத்த நேரம், சிறு சிறு பிரச்சனைகள் மற்றவர்களால் இவளுக்கு முளைக்க, இவள் தான் நண்பர்களிடம் பகிர்வதை குறைத்து, அரவிந்தனிடம் அந்த பிரச்னைக்கு தீர்வு நாடி சென்றாள். அரவிந்தனும் அவளின் பிரச்சனைகளுக்கு முடிவு காண, நாட்கள் இவன் என் நண்பன் என்ற ரீதியில் நகல, அரவிந்தனின் அன்பும், அரவணைப்பும், காதலும் இவளுக்குள் புதுவித கற்பனை உலகத்தை வளர்க்க, இதுவரை தன்னை சுற்றயுள்ள தன் சுற்றத்தை கொஞ்சம் மறந்தே போனாள்...

அனிதா தன் காதலை மறைக்க முடியாமல், அரவிந்தனிடம் காதலை சொல்ல, இனிய பரபரப்புடன் சந்தோஷ வானில், அழகாய் பறந்தனர் இந்த காதலர்கள். ஏக்கங்களும், தவிப்புகளும்,கனவுகளும், காதலும், கற்பனையும் அவர்கள் வாழ்வை காதலால்  நிரப்ப, அன்பு காதலர்களாய், அழகோடு பவனி வந்தனர்....

பிறிதொரு நாட்களில் அரவிந்தன் அனிதாவிற்க்காய், அனுப்பிய
சின்ன சின்ன பரிசுகளும், நலம் விசாரிக்கும் குறும்செய்திகளும், அக்கறை அழைப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய, அனிதா கொஞ்சம் தடுமாறியே போனாள்...அனிதா வர தாமதம் ஆனாலும் தவியாய் தவித்து அவள் அலுவலகத்தை படையெடுத்த அரவிந்தன், அவள் விரும்பி அழைத்தும், அவளை சந்திப்பதை தவர்க்கத் தொடங்கினான்...தவறான ஒருவனை காதலித்து விடமோ என்று மனக்கிடங்கில், பயத்தின் தீயைப் பற்ற வைத்தாள் அனிதா..

பிறகு அரவிந்தனின் செயலும், பார்வையும் இவள் பயத்தை உறுதி படுத்த, நிலைகுலைந்து போனாள் அனிதா..அவன் நிராகரிப்பின் காரணம் அறிய, அவனை அலைபேசியில் தொடர்புகொண்டாள்...அதுவரை அனிதா, அரவிந்தனை தொடர்புகொள்ள வேண்டும் என்று நினைத்தாலே, தொலைபேசியில் அழைக்கும் அரவிந்தன், இன்று அவள் பலமுறை அழைத்தும், தொடர்பை ஏற்க்க வில்லை...

அனிதா இதுவரை அனுபவிக்கத வலியை உணர, சுற்றி உள்ள அனைத்தும், இவளுக்கு சூனியமாய் தெரிய,எதிலும் இவள் கவனம் செல்லாமல், தன் காதலே கெதி என்று, அவன் பெயரையும், அவனோடு களித்த அந்த இடங்களுக்கும், சென்று தன்னோடு அவன் என்றும் இருக்கிறான் என்ற எண்ணத்தில், பொழுதை கழித்தாள் அனிதா...வேலையிலும் கவனமின்றி, நட்பின் பார்வையில் , தன் விசயங்களை பகிர்தலின்றி தனக்கென்ற ஒரு உலகத்தை கற்பனையிலே உருவாக்கி, அவனோடு உறவாடி வந்தாள்...

பின் ஒரு நாளில் அரவிந்தனிடம் இருந்து அழைப்பு வர, பறந்து சென்றாள் அனிதா அவனை சந்திக்க, அரவிந்தன் இந்த ஊடலுக்கு ஏதேதோ, காரணம் சொல்லி அவளை சமாதானப் படுத்த, அனிதாவின் உண்மையன்பை உணர்ந்த அரவிந்தன், பின் அவளை விட பன்மடங்கு அனிதாவை நேசித்தான்...வருடங்கள் ஐந்து காதலோடு கழிய, அனிதாவின் குடும்பம் அவளை திருமணத்திற்கு நிர்பந்திக்க, அரவிந்தனிடம் இதை பற்றி பேச முடிவு செய்தாள் அனிதா....

அரவிந்தனும் இதற்க்கு ஒப்புதல் அளிக்க, திருமணம் பற்றி பெற்றோர்களிடம் பேசும் முன்பே,  கனவுகளோடு காலம் களித்தனர் காதலர்கள்..இந்த நேரத்தில் அரவிந்தனின் அலுவலகத்தில், புதிய பணியில் வந்து சேர்ந்தாள் ராகினி...ராகினி அல்ட்ரா மார்டன் அழகி...வசதி படைத்தவள்...ஆரம்பத்தில் அரவிந்தனிடம் நட்போடு பழக ஆரம்பித்தவள், நாளைடவில் அரவிந்தனின் துடுக்குப் பேச்சும், அவன் குணமும் இவளை ஈர்க்க, காதல் வலையில் அவன் அனுமதி இன்றி விழுந்தாள் ராகினி...

ஒரு மாலையில் வழக்கம் போல் அனிதாவும், அரவிந்தனும்  சந்தித்துக் கொண்ட அந்த அந்தி நேரம் ராகினியைப் பற்றியும், அவள் பணபலத்தைப் பற்றியும் பேசி முடித்தான் அரவிந்தன்,,,அனிதாவிற்கு அவன் பேச்சு சந்தோஷத்தையும், கொஞ்சம் மிரட்சியையும் தந்தது...தன் காதலன் தன் மீது உள்ள நம்பிக்கையால் ஒரு பெண் பற்றி தன்னிடம், பேசுவது அவளுக்கு சந்தோஷம் தந்தாலும், அதற்காய் அவன் பிரயோகப் படுத்திய வார்த்தைகள் அவளுக்கு மிரட்ச்சியை தந்தது...எதற்கும் ராகினியிடம் தள்ளியே இருங்கள் என்று அன்பு கட்டளை இட்டுவிட்டு, அன்றைய சந்திப்பை காதலோடு முடித்தனர்.

ராகினி கொஞ்சம் கொஞ்சமாய் அரவிந்தனை, ஆளநினைத்தாள்...
அரவிந்தனும், ஒரு கட்டத்தில் வளைந்து கொடுத்தான்...இருவரும், நட்பின் வாசலில் நுழையும்போதே, அரவிந்தன் இதுவரை எந்த பெண்ணையும் நேசிக்கவில்லை என்ற, காதல் அனுமதி சான்றிதழுக்கு கையொப்பம் இட்டுச் செல்ல, ராகினியும்  இவன் தனக்கானவன் என்றே தன் மனதில் எண்ணிக்கொள்ள, ராகினி தன் காதலை அரவிந்தனிடம் சொல்ல, தன் குடும்ப சூழல் காரணமாய், பணக்கார பெண்ணை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அரவிந்தனுக்கு, ராகினியின் காதல் வரமாய் வந்தது என்று நினைத்து தன் வாழ்வை, பணம் கொண்டு வளப்படுத்தினான்..

.அனிதாவை சந்திக்கும் ஒரு வாரத்திற்குள், இவன் வாழ்வில் வந்திட்ட இந்த மாற்றத்தை உணராத அனிதா, வழக்கம் போல் காதலோடு அவனுக்காய் காத்திருந்தாள்..அரவிந்தனும், அன்றைய சந்திப்பில் நடந்தவைகளை, மறைத்து ராகினி அவனை விரும்புவதாகவும், தான் அதற்க்கு சம்மதிக்க வில்லை என்றும் சொல்லி விட்டு சென்றான்... ஆனாலும் இவன் கண்கள் பேசும் வாதையில்ர்த்தைக்கு பொருள் அறிந்த அனிதா, கண்ணீர் கொண்டு தன் காதலை மீண்டும் அவனிடம் சொல்ல, இதுவரை பணபோ இருந்த அரவிந்தன், ராகினியிடம் தான் ஆறு வருடம் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், இன்று நாங்கள் நண்பர்கள் என்றும் சொல்ல, ராகினி அனிதாவை சந்திக்க வேண்டும் என்று அரவிந்தனிடம் கட்டளை விதிக்க, அனிதா அறியாமல், அவர்கள் சந்திக்கும் அந்த மாலையில் ராகினி அரவிந்தனோடு வந்தாள்..

இதை சற்றும் எதிர்பார்க்காத அனிதா , ராகினி வருகையின் காரணம் அறிந்து செய்வதறியாமல், திணற, இறுதியில் ராகினியே தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும், உங்கள் பழைய காதல் தனக்கு தெரியும், உங்களின் நெருக்கமும் தெரியும் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவதாக இல்லை என்று சொல்லிவிட்டு, அவ் விடத்தை விட்டு நீங்கிச் சென்றாள்.... இது கனவாய்  இருக்குமோ என்று தன்னை தேற்ற நினைத்து கொண்டு இருக்கையில், அரவிந்தன் ராகினி வசம் சென்றதை அவன் வார்த்தைகள் அவளுக்கு காட்டியது...

தனக்கான உலகம் சூனியமாய்ப் போனதை உணர்ந்த அனிதா, செய்வதறியாமல் விழிநீர் வழிய, தான் ஒருவனால் ஏமாற்றப் பட்டோம் என்பதை உணர்ந்து, தற்கொலைக்கு முயல, உணர்வுகள் இணைத்த அவள் நட்பு, என்றும் இல்லாமல் அவளை தொடர்பு கொள்ள
தன் நிலையைச் சொல்லி அழுத அனிதாவை, ஆறுதல் சொல்லி, அவள் உண்ட விஷத்தை மருத்துவர் துணையுடன் வெளியேற்றினர்....

இவள் விஷம் அறிந்திய காரணம் அறிந்த நண்பர்கள், அரவிந்தன் அலுவலகத்தில் படையெடுக்க, அவனை தாக்கினர்...ராகினி நிலைமை உணர்ந்து அவர்களை விலக்கி விட, அரவிந்தன் பாதுகாக்கப்பட்டான்... தான் ராகினி  முன் தண்டிக்க பட காரணமாய் இருந்த அனிதாவை  எப்படியும் கொன்று விட வேண்டும் என்ற உறுதியோடு இருந்த அவனை, அந்த மருத்துவமனைக் காட்சி கொஞ்சம் மாற்றிப் போட்டது....

இருப்பினும் கொச்சை வர்த்தைகாளால் வசைபாடி விட்டு, தனக்கும், ராகினிக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட அந்த திருமண அழைப்பிதழை அனிதாவிற்கு தந்து விட்டு சென்றான்,

தோழி அனிதா இன்று நட்பின் துணையோடு நலமாக சென்னையில், தன் பணிகளோடும், அவன் நினைவு தந்த வலிகளோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்...அரவிந்தன் தன் புது காதல் மனைவியோடு, உறுத்தாமல் உலா வருக்கிறார்....

நண்பர்களே...இது என் தோழியின் தோழிக்கு நடந்த கதை....எது காதல், எது காமம்...எங்கே நமது தேடல்?....என் தோழியின் காதலன் போல் தெளிவான அறிவில்லாமல், சஞ்சலப் படும் மனதிற்கு, இன்னொருவர் பலியாகலாமா?.....நமக்கு தெரிந்ததெல்லாம், காதலை பெண்கள் புறம் தள்ளுவார்கள் என்று, இங்கு என் தோழியின் சுயநல காதலன்.அந்த தோழியின் உண்மைக் காதலை புறம் தள்ளினார்...

இது ரொம்ப தேவையான பதிவான்னு நீங்க கேக்கலாம்...ஆனா இன்னைக்கு தற்கொலைகள் அதிகமா இருக்க இரண்டு காரணம் ஒன்னு:கடன்
இன்னொன்னு : காதல்....
கடன் தன் சுற்றியுள்ள சுழலின் நிலைமையை பெருக்க இல்ல சமாளிக்க வாங்குற விஷயம்....
ஆனால் காதல்....இலகுவாய் ஒருவர் உள்ளம் நுழைத்து, உயிரை இழக்கும் அளவிற்கு துணிய  வைக்கும் மாய கொள்ளைக்காரன் அல்லவா இந்த காதல்....

இப்போ என் தோழியின் வீட்டில் திருமண பேச்சுக்கள் நடக்க, தோழி அவற்றை புறம் தள்ளி, சுயமாய் வாழ விரும்புவதாய், அவர் பெற்றோரிடம் சொல்லி வருகிறார்...என் இனிய நண்பர்களே... என் தோழிக்கு நல்ல நடப்பாய் தாங்கள் தரும் பதில் என்ன என்று அவர் அறிய ஆவலாய்  உள்ளார்.நீங்கள் இந்த பதிவுக்கு தரும் வரவேற்ப்பை பொறுத்தே இதை போன்ற உண்மை சம்பவங்களை பகிர இருக்கிறேன்..

வழக்கம் போல் இந்த பதிவை உங்கள் பார்வை பயணத்தில் பயணப் படவைக்கிறேன்....(இப் பதிவை நகைச்சுவையாய் எடுக்காமல் ஒரு பெண்ணின் வாழ்க்கை இப் பதிவில் உள்ளதென்ற எண்ணத்தில் உங்கள் கருத்துக்களை இடவும்...அதோடு நாகரீக மான பின்னூட்டங்கள் மட்டுமே இங்கே வெளியிடப்படும், நகைச்சுவையாய் அல்லது வேறுவிதமாய் நீங்கள் அளிக்கும் பின்னூட்டம் புறம் தள்ளப்படும் என்பதையும் தெரிவிக்கிறேன்.புரியுறவங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.... )

Tuesday, 29 November 2011

இரவுகளில் நான்…இரவில்
கடிகார ஓசையையும்,
சுவர் பல்லிகளின் சத்தத்தையும்,
தூரத்தில் குறி சொல்ல வந்திருக்கும்
சாமக்கோடங்கியின் ஓசையையும்
உள்வாங்கிக்கொண்டே
ஆளரவமற்ற அந்திஜாமத்தில்
விழித்திருக்கும் உன் நினைவுகளோடு
தனித்திருக்கிறேன்
நான் …
தொலைவில் இருந்துவரும்
அமானுஷ்ய சத்தத்தில்,
இதயத்துடிப்பு நிற்கும் அளவு
பயம் கவ்வி இழுக்க,
உள்ளிருக்கும் பயத்தை
வெளிக்காட்ட வகையில்
என்னை மீட்டெடுக்கிறேன்
உன்னை பற்றிய நினைவுகளிருந்து…
இந்த அடர்ந்த பயம் கக்கும்
இருட்டில் ஆறுதல் என்னவோ
நிலவு மட்டும் தான்…
என்னைப் போல
இரவுகளில் அதுவும்
தனித்திருப்பதால்…
மெல்ல மெல்ல இரவின் மடியில்
இருந்து இறங்கும் நிலவுக் குழந்தை
உறங்கிப் போக,
எல்லோரும் விழிக்க
தொடங்கும் போது
உறங்கிப் போகிறேன்
நான்…

Thursday, 24 November 2011

அடைமழைக் காதல்


( பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நண்பர்களாகிய சௌந்தர்,நான்,கூர்மதியன்  ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ”அடைமழை காதல்” என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!அவர்கள் பதிவை அவர்களில் பெயரில் சொடுக்கி பார்த்துக் கொள்ளவும்….வழக்கம் போல இந்த பதிவு உங்கள் பார்வை பயணத்தில்……)
             காதல் உச்சரித்த  மாத்திரத்தில், உள்ளுக்குள் உயிர் பூக்கச்செய்யும் என்ற பலர் சொல்லி கேட்டதை அன்றே உணர்ந்தேன்….மாலையில் ஒரு மழை நாளில், குடைக்குள் இடம் கேட்டவனை அனுமதித்தேன்…பார்த்த மாத்திரத்தில் சொக்கி நின்றேன் அவன் விழி மந்திரத்தில் ..அவன் முதல் பார்வையிலே முற்றும் துறந்த என் காதலனாய் என்னுள் நுழைந்தான்..மழைக்கு நன்றி சொல்வதா?, இல்லை மழையில் நனையாமல் இருக்க குடை கொடுத்த  என் தோழிக்கு  நன்றி சொல்வதா? இல்லை தயங்காமல் என் அருகில் வந்து, குடைக்குள் இடம் கேட்டு, எனக்குள் காதல் மழை பொலியச் செய்த இவனுக்கு நன்றி சொல்லவா?, என்ற புரியா சந்தோஷத்தில் ஹார்மோன்கள் யுத்தம் செய்யயிலே, வந்தவன் அமைதி கலைத்தான், ஹலோ ஸ்வேதா  என்று…..
என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என்பதை விட, என் பெயர் இத்தனை அழகா என்று உள்ளுக்குள் உரைத்துக் கொண்டு, பொய்யாய் ஒரு கோவப் பார்வை அவனை பார்த்தேன்..என் பார்வையில் தாக்கத்தை உணர்ந்தவன் 
சாரி ஐ ஆம் விஷ்வாஸ்…..
ஐ ஆம் வொர்கிங் அஸ் அ சாப்ட்வேர் என்ஜினீயர்,
பை தி வே,நான் நீங்க இருக்கும் அதே ஏரியாலதான், உங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல குடிவந்திருக்கோம்..   ஐ நோ you வெரி வெல்,எங்க  அம்மா உங்கள பத்தி சொல்லிட்டே இருப்பாங்க என்ன அடுக்க அடுக்க அதிர்ச்சி கொடுத்து  பேசிக்கொண்டே போனவனை, கண்கொட்டமால் பார்த்துக் கொண்டிருந்தது உள்ளிருக்கும் காதல்….  
உள்மனது அவனறியாமல் என்னிடம் உரையாடியது, அறிவு கெட்டவளே, இவ்ளோ நாள் இவன எப்படி டி மிஸ் பண்ணுன…. ஹி இஸ் டூ ஸ்மார்ட்…ஹலோ ஸ்வேதா கேன் யூ ஹியர் மீ, என்று இடைமரித்தவனை …..  
என்ன என்று கேள்வி கேட்பதைப் போல பார்த்தேன்…. உங்க வீடு வந்திருச்சு, தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப், என்று என் பதிலுக்கு காத்திராமல் அவன் இல்லம் நுழைந்தான்…நானோ இருப்பு கொள்ளாமல், அவன் உருவம் மறையும் கடைசி புள்ளிக்காய் காத்திருத்தேன் ..ஐயோ எப்படி மறந்தேன் என் வீடு வந்தது கூட  தெரியமால், ஒரே பார்வையில என்ன ஆச்சு எனக்கு …என்ன அவன் என்ன நினச்சிருப்பான்…என்னடி ஸ்வேதா மொதோ பார்வையிலே ஸ்பாட் அவுட் அகிட்டயேடி…போச்சு உன்ன அவன் தப்பா நினச்சிருப்பான்..
வெளியில் குடைக்குள் ஒரு போராட்டம்  அவன் தனியே என்னை விட்டு சென்றதில் இருந்து….என்னடி எதுவும் நேத்திக் கடனா?…பக்கத்துக்கு வீட்டு மாமி கேட்கையிலே உணர்ந்தேன்..மழை விட்டு வெகுநேரம் ஆகியிருந்ததை..பதிலுக்கு சிரித்து விட்டு, பதில் வருவதற்குள் வீட்டுக்குள் சென்றேன்…மழையில் நனைந்த உடைகளை உலர்த்த முடிவு செய்து ஜன்னலின் கதவுகளை திறந்துவிட்டேன்… மணலோடு வந்த மழை  வாசம் மறுபடியும் அவன் நினைவுகளை விதைத்து சென்றது..
எப்படி நிகழ்ந்தது 
என்று யோசிக்கும் முன்னே,
பலர்க்கு காதல்
அரங்கேறி விடும்…
என் காதலும் அப்படித்தான்..
கனவுகளில் இருந்தவளை மீட்டெடுத்தது அந்த குறும்செய்தி,
வாட் யு டூயிங் ஸ்வேதா?
யார் நம்பர் என்று குழம்பிக் கொண்டிருக்கையிலே,
ஐ ஆம் விஸ்வாஸ்…திஸ் இஸ் மை நம்பர்…
இன்றே முளைத்த என் காதலுக்கு இத்தனை வலிமையா, மனதில் அவன் அலைபேசி என் வாங்கி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் இத்தனை வலிமை கொண்டு, அவனிடம் என் நினைவை சேர்த்ததா?….
இருப்பினும் சுதாரித்து, பதில் செய்தி அனுப்பினேன்…
என் நம்பர் உனக்கு எப்படி தெரியும்னு?
தெரியும்…..என்று பதில் வந்தது….
கொஞ்சம் இடைவெளி விட்டு அமைதி காத்தேன்…என்ன நடந்தது?…யார் இவன்?…எதற்கு என் மனது இவனை தேடுகிறது?…பார்த்த மாத்திரத்தில் காதல் வந்துவிடுமா?… ஒருவேளை இவன் அழகனாய் இருப்பதால் எனக்கு இவன் மீது காதல் வந்ததா?…இல்லை முதல் பார்வையிலே இவன் மீது காதல் வந்ததால் அழகாய் தெரிகிறானா?…எதற்கும் பொறுமையாய்  இரு ஸ்வேதா என்ன உள்மனம் எரிச்சரிக்க, பதில் அனுப்பாமல் உறங்கிப்போனேன்…
பொழுது விடிந்தது, அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டு இருந்த நேரம். இன்று ஒப்பனைகள் இட்டுக் கொள்ளாமலே, காதலால் சிவந்திருந்தது கன்னம்…வழக்கமாய் உதட்டோரம் ஒட்டி இருக்கும் புன்னைகையில் வழக்கத்திற்கு மாறாய், வெட்கம் ஒட்டி இருந்தது…வாசல் வந்து நின்று, அவன் வரவை உறுதி செய்தேன், என் வருகைக்காய் காத்திருந்தவன் போல, என்னோடு அவனும் சேர்ந்து வந்தான்….
விஸ்வா : குட் மார்னிங் ஸ்வேதா…
ஸ்வேதா: குட் மார்னிங் விஸ்வா….
விஸ்வா : என் பேரு இவ்ளோ அழகுன்னு நீ என் பேர சொல்லும் போது தான் தெரியுது ஸ்வேதா…
ஸ்வேதா: (நம்ம மனசுல நினச்சத இவனும் அப்படியே சொல்லுறானே!!!) அப்படிலாம் இல்ல உங்க பேரு நெஜமாவே அழகா இருக்கு…
விஸ்வா : அழகு பெண்கள்,
உதடுச் சாயத்தோடு
பொய்யையும் சேர்த்தே
பூசி இருப்பார்களாம்….
ஸ்வேதா: அப்படியா?
விஸ்வா : ம்ம்…
ஸ்வேதா: சரி நீ…. இல்ல ஒன்னும் இல்ல,
விஸ்வா : என்ன சொல்ல வந்த சொல்லு.
.
ஸ்வேதா:இல்ல ஒன்னும் இல்ல,
விஸ்வா : சரி நானே  சொல்லுறேன்… ஐ லவ் யூ ஸ்வேதா..
ஸ்வேதா : (மனசில் இருப்பதை கண்டறிந்து விட்டானோ என்ற பயத்தோடு ) விஸ்வா உங்கள எனக்கு நேத்து தான் தெரியும்…அதுக்குள்ளே இப்படி பிரப்போஸ் பண்ணுறது உங்களுக்கு சரியா இருக்கா?….
விஸ்வா : என்ன உனக்கு நேத்து தான் தெரியும், ஆனா உன்ன நான் இங்க வந்த ஆறு மாதமாவே தெரியும்….முதல் பார்வையிலே காதல் வரும்ன்னு, என் நண்பர்கள்  சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன், ஆனா அத மொத மொத உணர்ந்தேன் உன்ன பார்த்தவுடனேயே, என் மனசுக்குள்ள காதலா வந்துட்ட ஸ்வேதா…
ஸ்வேதா: (நம்மப் போலவே நினைகிறானே, நம் காதலன் என மனதுக்குள் சிரித்துக் கொள்கிறாள்…) சாரி எனக்கு உங்க மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை விஸ்வாஸ்… பாய் ஐ ஆம் மூவிங் நொவ்…
அவன் ஏக்கமாய் பார்ப்பதை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்… அலுவலக பணிகள் ஒன்றும் செய்யமுடியவில்லை…கோப்புகள் அனைத்திலும் அவன் ஏக்கப் பார்வையே என்னை ஆட்டிப் படைத்தது…அலுவலக நண்பர்கள் அந்நியமாய் தெரிந்தனர்…. அலுவலக நாட்காட்டி, ஒவ்வொரு நிமிடத்திலும், நெருப்பள்ளி போடுவாதாய் ஒரு எரிச்சல்…அவன் குரல் கேட்க நினைத்து, அவனை தொடர்பு கொண்டேன்…
அவன் இணைப்பு கிடைக்கமால், இருதயம் இடமாறித் துடிக்க, இரண்டே நாளில் நான் மாறிப் போனதை எண்ணி, வெட்கம் தான் வந்தது…
காதல் ஒரு
அழகான திருட்டு,
எப்போது
களவாடினோம்,
எங்கே களவாடப்பட்டோம்
என்று தெரியாமலே,
இதயங்களை தொலைக்க வைக்கும்…
கண நேரக் கனவை கலைத்தது, அந்த அழைப்பு, அவன் தான் அவனே தான்…மனது பட்டாம் பூச்சியாய் படப்படத்தது…இரு கைகளும் சிறகுகளாய் வானில் விரித்து பறக்கவைத்தது….
ஹலோ ஸ்வேதா,
ஹாய் விஸ்வா
இம்ம்..சாரி ஸ்வேதா உங்கிட்ட பேசாம இருக்க முடியல, எந்த வேலையும் செய்ய முடியல, இன்னைக்கு சாயங்கலாம், உன் ஆபீஸ் பக்கத்துல இருக்கிற பீச்க்கு வரையா?
வேண்டாம் என்று தொண்டைவரை சண்டையிட்ட வார்த்தை, வெளிவரும் போது காதலாய், சரி வரேன் என்று பதில் சொன்னது அவனிடம்…
ஓகே பாய் ஸ்வேதா… ஐ ஆம் வைட்டிங் பார் யூ… பாய் நொவ்…
இணைப்பை துண்டித்தாலும், இன்னும் இருதயத் துடிப்பு வேகத்தைக் குறைக்கவில்லை… கண்கள் ஒவ்வொரு நிமிடமும், கடிகாரத்தோடு சண்டை இட்டுச் சென்றது…
அலுவலகம் முடிந்தது, என்னையும் அறியாமல் கால்கள், அவன் இருக்கும் திசை நோக்கி விரைந்து சென்றது…எப்போதும் ஒப்பனைகள் பூசிக்கொண்ட முகம், இன்று வெட்கங்களை அள்ளி பூசிச் சென்றது…
காதலிக்க தொடங்கும்
பலருக்கும்,
கவிதை வந்துவிடுகிறது…
உன்னை பற்றி
எழுதுகையில்,
என் எழுத்துக்கும்
காதல் வந்துவிடுகிறது
அவ்வளவு அழகு நீ…
கடல் ஓசை நடுவே, அமைதியாய் கடல் மணலில் விரல் பதித்து விளையாடும் குழந்தையாய், அழகாய் அமர்ந்திருந்தான். அவன்அருகில் சென்றேன்…என்னை பார்த்ததும், படப்படத்த அவன் விழிகள் பார்த்து கிறங்கி நின்றது என் காதல்…
ஸ்வேதா, நான் உன்ன விரும்புறேன், நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைக்க விரும்பல, என் மேல நம்பிக்கை இல்லாட்டி, எப்போ என்ன பிடிக்குதோ அப்போ என் கிட்ட உன் காதல சொல்லு, மறு நிமிசமே உன்ன என் அம்மா முன்னாடி, அவங்க சம்மதத்தோட  என் மனைவியா ஏத்துக்கிறேன்….
இவனை பார்பதற்கு முன் ஒத்திகை பார்த்து கையேடு எடுத்து வந்த வார்த்தைகள், பேசப்படாமையே இருந்தன இந்த சந்திப்பில்..என்ன ஸ்வேதா ஆச்சு உனக்கு, அவன் பேசுறதுக்கு பதில் சொல்லாமையே இருக்கையே, என உள்மனம் என்னை உந்தி தள்ளியது… விஸ்வா?
சொல்லு ஸ்வேதா…..
எனக்குள்ள மாற்றம் இருக்கு,,
எனக்கு உன்ன பிடிச்சிருக்கு, ஆனாலும்,
முதல் பார்வை மோதலில் காதல் பிறக்குமா?…..
அடி பைத்தியக் காரி,
கண்கள் பேசத்
தொடங்கிவிட்டால்
அதற்க்கு பெயர்
காதல்….தெரியாதா?
இம்ம்…
எப்போதும் எனக்கு நீ இப்படித்தான்
இரட்டை குழந்தையை தான் பிரசவிப்பாயா?
என்ன சொல்ற?….
இல்ல உன் உதட்டு தழுவலில், பிரிந்து வரும் ஓசை,
இம் என்ற இந்த இரட்டை குழந்தையைத் தான் எனக்கு இதுவரை கொடுத்திருக்கு, அதான் கேட்டேன்….
புன்னகையுடன் வெட்கத்தையும் அவனுக்கு  பரிசளித்தேன்,
விஸ்வா ஐ லவ் யூ…
காதல் எத்துணை
வலிமையானது,
ஒரே நாளில்
என் அடையாளங்களை
மாற்றிப் போட்டுவிட்டதே….
இருவரும் குடைக்குள் தஞ்சமான அதே இடத்தில் இன்று காதலர்களாய் கதை பேசி நடந்தோம்…விஸ்வாஸ்  இடைமறித்து, உனக்கு என்ன என்ன பிடிக்கும் ஸ்வேதா?………………
எனக்கா, எதையும் எண்ணாம உன்னை மட்டும் எண்ணப் பிடிக்கும்…
பாருடா, நீ கூட அழகா பேசுறயே…
பின்ன அழகன் நீ என்கூட இருக்கையில, என் பேச்சு அழகா இருக்கிறதுல
என்ன அதிசியம் இருக்கு…
ஸ்வேதா, நம்ம ரொம்ப அதிஸ்டசாலிகள் இல்லையா, நம்மக்கான நம்மோட காதல் குழந்தையை இருவரும், சரியான புரிதலோட அடையாளம் கண்டுக்கிட்டோம் இல்லையா…
இம்ம்..ஆமாம் விஸ்வா..ஒரே நிமிடத்தில் எத்துணை மாற்றம்…காதலோடு சண்டையிட்டவள், இன்று உன் காதலியாய் உன் கரம் பற்றி வருகிறேன்,
நீ கண்ணுக்குத்தான் மையிட்டாய்,
என்றால்
எனக்கும் மையிட்டு
எப்படி மயக்கினாய்
உன் கதலனாக?
ஹ ஹ…
சிரிக்காத, ஸ்வேதா..
சரி, வீடு வந்துருச்சு, நீ உன் வீட்டுக்கு போ விஸ்வா,
ஹே நீ வீட்டுக்கு வா?…அம்மாகிட்ட உன்ன அறிமுகம் செய்து வைக்கிறேன்…வா
ஏன் டா, இப்படி…எத்தன நாளா எனைத் தெரியும்னு அம்மா கேட்ட என்ன சொல்லுவ?
டா வா? என்னடி கட்டிக்க போறவன டா னு சொல்லுற, இதெல்லாம் உன் அத்தைக்கு பிடிக்காது…ஒன்னு தெரியுமா ஸ்வேதா, இந்த வீட்டுக்கு குடிவந்த அன்னைக்கே, என் அம்மா உன்ன பாத்து, எனக்கு இந்த மாதிரி ஒரு மருமகள் தான் அமையணும்னு சொன்னங்க…அப்போவே உன்ன கொஞ்சம்  பிடிச்சிருச்சு…அப்பறம் அன்னைக்கு ஒரு நாள், பச்சை  சேலையில் வெளியே நீ வந்த அப்போ, வீட்டு பூக்கள் கூட்டமே, இடமாறி பூத்து விட்டோமொனு தலை கவிழ்ந்து உன்னை பார்த்தப்போ, உன் அழகு கண்டு கொஞ்சம் பிடிச்சது, அப்பறம் அன்னைக்கு ஒரு நாள் என் அம்மாவுக்கு அன்பாய் நீ இட்டு விட்ட கோவில் திருநீறில், கொழுந்து விட்டு எரிந்தது என் காதல்..
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை கொள்ளை கொண்ட,
காதல் திருடி நீ…
நல்ல கவிதையா பேசுறயே….
அழகு பெண்ணே ஒரு கவிதை தான்….அதிலும் என் தேவதை நீ கூட இருக்கையில, மூச்சு காத்துக் கூட கவிபாடுது…நான் என்ன செய்ய?
.சரி என்ன உனக்கு எப்படி பிடிச்சது சொல்லேன்…
நீ தான் என்ன மொத்தமா பிடித்திருக்கயே…இதுல தனி தனியா என்னத்த சொல்ல….சரி விஸ்வா உன் அம்மா நம்ம காதல ஏத்துப் பாங்களா?
இந்த தேவதைய யாருக்குத் தான் பிடிக்காது…கண்டிப்பாக பிடிக்கும் செல்லம்…
என்னடா இங்க நடக்குது….
என்ன ஸ்வேதா இங்க வந்து இருக்க?……
அம்மா நான் ஸ்வேதா வா காதலிக்கிறேன்….
என்ன விஸ்வா சொல்லுற,
ஆமாம் ஸ்வேதா இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால வாழ முடியாதுமா?
நீ என்னம்மா சொல்லுற ஸ்வேதா?
எனக்கும் விஸ்வா வா பிடிசிருக்குமா?
நல்ல பசங்க, இப்போதான் ஸ்வேதா ஜாதகத்த அவங்க வீட்டுல இருந்து வாங்கிட்டு  வந்தேன்….உங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா நாங்க முடிவு பண்ணி இருக்கோம். அதுக்குள்ளே நீங்க முந்திக்கிடேங்களா?….
அதிர்ச்சில் இருந்து மீளாத எங்களை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்….
ஒரே பார்வையில் காதல் கொண்டு, போராட்டம் இல்லாமல், காதலோடு கிடைத்த வாழ்க்கையை எண்ணி எண்ணி, சொல்லெனா மகிழ்ச்சியில் திக்கி முக்காடிக் கொண்டிருக்கிறோம்….இடையில் கல்யாண வேலைகள் ஜோராய்  நடைபெற்றுக் கொண்டிருக்க,
விடாத தூறலாய் , அவன்  காதலில் நான் நனைய,
என் காதலில் அவன் நனைய எங்களோடு சேர்ந்து நனைகிறது
எங்கள் அடைமழைக் காதல்….
முடிந்தால் எங்கள் திருமணத்திற்கு வரவும்…..உன்னை அவளோடு எதிர் பார்க்கின்றோம் மழையே…………
எப்போதும் வந்து விழும்
மழை,
இந்த முறை கொண்டு
வந்தது எனக்கான காதலை.