Friday 23 September 2011

மாறாத பழமை



ராம்ஸ்
எரிந்து விழும்
நட்சத்திரத்தை
கண்டுவிட்டால்
பச்சை மரத்தை
பார்த்து கொண்டு
பச்சை மரம் கண்டேன்
பால் மரம் கண்டேன்
சிவா சிவா
என்று சொல்லடா
என்பாள் பாட்டி
இன்று
விஞ்ஞான உண்மைகள்
அனைத்தும் அறிந்து
தெரிந்து கொண்ட பிறகும்
எரிந்து விழும்
நட்சத்திரத்தை கண்டுவிட்டால்
வாய்
முணுமுணுக்கிறது
கண்கள்
பச்சை மரத்தை தேடுகிறது
என்னை அறியாமலே

No comments:

Post a Comment